சிவக்கொழுந்து செல்வராஜா

(ஓய்வு பெற்ற பிரதம இராசாயன பொறியியலாளர்)

தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் இரசாயன பொறியியலாளருமான சிவக்கொழுந்து செல்வராஜா நேற்று (14.05.2018) திங்கட்கிழமை அகால மரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவக் கொழுந்து மற்றும் பொன்னம்மா தம்பதியரின் அன்புமகனும் செல்வராஜா இராஜேஸ்வரியின் அன்புக்கணவரும் செல்வராஜா சிவப்பிரியன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), செல்வராஜா தர்ச்ஷனா (விஞ்ஞான ஆசிரியை, கொ/ விவேகானந்தா தேசிய கல்லூரி), செல்வ ராஜா பபியா( போதனா ஆசிரியர், Demonstrator, வயம்பா பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத்தந்தையும் திருமதி அன்னலட்சுமி தம்பிராசா ( ஓய்வு பெற்ற ஆசிரியை), திருமதி சரஸ்வதி இராயரட்ணம் (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை, London St. Joseps College, Maruthana) காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி ஜெயராஜசிங்கம், சிவக்கொழுந்து டீச்சர் மற்றும் பரமேஸ்வரி சண்முகரட்ணம் (கொக்குவில் இந்துக்கல்லூரி), காலஞ்சென்றவர்களான இராஜஸ்வரி இந்திரன், செல்வரட்ணம் சிவக்கொழுந்து (ஜேர்மனி), ஆனந்தகிருஷ்ணன் மற்றும் தர்மராஜா (சட்டத்தரணி, பிரான்ஸ்), Dr.தவமலர் சீவரத்தினம் (ஓய்வு பெற்ற சித்த வைத்திய அதிகாரி, யாழ். மாநகர சபை), காலஞ்சென்ற சி. சச்சிதானந்தன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச்சகோதரரும் கா. தம்பிராசா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), எஸ். இராசரத்தினம் (ஓய்வுபெற்ற ஆசிரியர் லண்டன்), காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம் (கணக்காளர்) மற்றும் P.சண்முகரட்ணம் (ஓய்வு பெற்ற ஆசிரியர், கோண்டாவில் மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற S.இந்திரன் (விநாயகர் ஸ்டோர்ஸ் முதலாளி) மற்றும் S. சீவரட்ணம், சொர்ணகாந்தி, பங்கஜசெல்வி ( ஆசிரியை, பிரான்ஸ்), சரோஜா (இந்தியா) ஆகியோரின் அன்புமைத்துனரும் சிவபாலன் (கனடா), கருணாபாலன் (கனடா), கலையரசி செல்வகுமார் (ஆசிரியை, இணுவில் மத்திய கல்லூரி), கலாரஜனி, வித்தியகலா (பொறியியலாளர், லண்டன்), சுரேஸ்குமார் (Dental Surgen London), கேமேந்திரகுமார் (பொறியியலாளர், லண்டன்), ஆகியோரின் அன்புமாமனும் சுனிதா செல்வரட்ணம் (ஆசிரியை, கிளிநொச்சி), மயூரன் (ஜேர்மனி), சசி, சுவி, ரோகினி, குமுதா, லதா, கௌசல்யா (பிரான்ஸ்) ஆகியோரின் சித்தப்பாவும் இராமனாதன் (ஓய்வு பெற்ற அரச ஊழியர் ,யாழ். மாநகரசபை), கமலநாதன் (கனடா), பரமேஸ்வரி (கனடா) ஆகியோரின் மச்சானும் சிவஞான சேகரம். ஜெகதீஸ்வரி, உசா ஆகியோரின் சகலனும் அனுசனின் மாமனும் திலீப், சகிலா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.05.2018) செவ்வாய்க்கிழமை மு.ப.10 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
தாவடி
வசிப்பிடம்:
தாவடி
காலமான திகதி:
14.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
15.05.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: வன்னியசிங்கம் வீதி, தாவடி வடக்கு, கொக்குவில்.