கந்தசாமி சண்முகநாதன்

பசறை பிரபல வர்த்தகர் (Sun Stores, Sun Traders Passara)

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நாவலர்றோட், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பசறை பிரபல வர்த்தகர் கந்தசாமி சண்முகநாதன் (Sun Stores, Sun Traders Passara) நேற்று (07.02.2018) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்னம்மா தம்பதியரி்ன் அன்புமகனும் காலஞ்சென்ற இரத்தின சேதுகாவலர் மற்றும் அன்னபூரணம் தம்பதியரின் அன்புமருமகனும் உமாதேவியின் அன்புக்கணவரும் டினேஸ்குமார் (ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்), கோகுலநாதன் (பசறை), அனோஜன், பகீரதன் ஆகியோரின் அன்புத்தந்தையும் காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, உலகநாதன் மற்றும் நாகேஸ்வரி, பத்மநாதன், தில்லை நாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச்சகோதரரும் கதிரவேலு, ராஜேஸ்வரி காலஞ்சென்ற அருளம்பலம் மற்றும் புவனேஸ்வரி, தவமலர், நாகரஞ்சினி, அம்பிகை பாகன், சுந்தரேஸ்வரன், கங்காதேவி, விக்கினேஸ்வரன் காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புமைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.02.2018) வியாழக்கிழமை பி.ப. ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
காரைநகர் தங்கோடை
வசிப்பிடம்:
நாவலர்றோட், யாழ்ப்பாணம்.,
காலமான திகதி:
07.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.02.2018
தகவல்: மனைவி, பிள்ளைகள்.
முகவரி: 136/ 4, நாவலர் றோட், யாழ்ப்பாணம்.