திருமதி பூமணி கனகசபாபதி
கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நந்தாவிலை வாழ்விடமாகவும், உரும்பிராய் தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூமணி கனகசபாபதி (15.10.2017) ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சரஸ்வதி தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்ற கனகசபாபதியின் அன்புமனைவியும் காலஞ்சென்றவர்களான லீலாவதி, பாலசுப்பிரமணியம், ரத்ணசிங்கம், ராசலிங்கம், ராசரத்தினம் மற்றும் சரோஜினிதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் தவபதி, புஸ்பவதி காலஞ்சென்றவர்களான சிலோன்மணி, யோகநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புமைத்துனியும் கனகேந்திரன் (ஆஸ்திரேலியா), உதயகுமார் (ஆஸ்திரேலியா), யோகமாலர், கமலநாதன், நீதிராசா (கனடா), கவிச்சந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் மகேஸ்வரி, விஜயலட்சுமி, பரமநாதன், பவானி, கமலா, மதிவதனா, நிலானி ஆகியோரின் அன்புமாமியும் கஜன், கிதன், சிந்து, மகிந்தன், அருணன், காருண்யா, சிந்துஜன், நர்த்தனா, ஜீவனா, கீர்த்தனா, நிவேதிகன், நிதர்சனா, ரதன், லெனின், கெவின் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் நவிஷா, அஸ்மியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (17.10.2017) செவ்வாய்க்கிழமை பி.ப. 2 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.